Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மேற்கு வங்கத்தில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு!

06:50 PM Nov 27, 2023 IST | Web Editor
Advertisement

மேற்கு வங்க மாநிலத்தில் சரக்கு ரயில் மோதியதில் ஒரு குட்டி யானை, மற்றும் இரண்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்தியாவில் ரயில் மோதி யானைகள் இறக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. மேற்கு வங்க மாநிலம் பக்சா புலிகள் காப்பக வனப்பகுதியில் சரக்கு ரயில் மோதிய விபத்தில் 3 யானைகள் உயிரிழந்தன. இச்சம்பவம் ராஜபத்காவா மற்றும் கல்சினி ரயில் நிலையங்களுக்கு இடையே ஷிகாரி கேட் அருகே காலை 7 மணியளவில் நடந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு குட்டி மற்றும் இரண்டு யானைகள் சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தன.

முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், மேற்குவங்க மாநிலம், அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள சப்ரமாரி காப்புக்காடுக்குள் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கர்ப்பிணி யானை மீது சரக்கு ரயிலில் மோதியது. இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 20 யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் யானைகள் எண்ணிக்கையில் சுமார் 2% மேற்குவங்க மாநிலத்தில் உள்ளன. இருப்பினும், இயற்கைக்கு மாறான யானைகள் இறப்பிற்கு அம்மாநில ரயில் விபத்துகள் ஒரு காரணமாக உள்ளதாக சுட்டிக்காடப்படுகிறது.

அதேசமயம், இதுபோன்ற விபத்துகளை தடுக்க அம்மாநில அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.யானைகள் விபத்துகளில் உயிரிழப்பதை தடுக்க மாநில அரசு கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags :
CollisiondeathElephantNews7Tamilnews7TamilUpdatesTrainWest bengal
Advertisement
Next Article