Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தாம்பரம் கால்வாயில் கொட்டப்பட்ட ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள்! பாலின்றி தவித்த மக்கள் அதிர்ச்சி!

03:26 PM Dec 09, 2023 IST | Web Editor
Advertisement

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பால் மக்கள் பால் பாக்கெட் கிடைக்கமால் அவுதியுற்ற நிலையில், தாம்பரம் கால்வாயில் ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டிருப்பதைப் பாா்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

“மிக்ஜாம்” புயலால் முன் எப்போதும் இல்லாத வகையில் இடைவிடாது பெய்த அதிகன மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்புகுள்ளானது.  மிக்ஜாம் புயல் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப்போட்டுவிட்டது. உணவு,  குடிநீா்,  பால்,  மின்சாரம்,  தகவல் தொடர்பின்றி மிகவும் வேதனைக்குள்ளாகினர். பாதிக்கப்பட்ட சென்னையில் புயல் சீரமைப்புப் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர்,  மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்டை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு உணவு,  உடை உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்களை பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலமும் வழங்கப்பட்டு வருகின்றன.

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பால் மக்கள் பால் பாக்கெட் கிடைக்கமால் அவுதியுற்ற நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குளக்கரைக்கு பின்புறமாக உள்ள கால்வாயில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டிருந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
aavin milkchennai cycloneChennai FloodsChennai Floods 2023Chennai rainCyclone MichaungCyclone MichuangDMKMano ThangarajMichaungnews7 tamilNews7 Tamil UpdatesTamilNadu
Advertisement
Next Article