Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கரூர் - வேலாயுதம்பாளையம் பாம்பலம்மன் கோயில் திருவிழா! நேர்த்திக்கடன் செலுத்திய ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

08:29 PM Apr 27, 2024 IST | Web Editor
Advertisement

குளித்தலை அருகே வேலாயுதம்பாளையம் பாம்பலம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சேவல்களை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement

கரூர் மாவட்டம்,  குளித்தலை அருகே வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பாம்பலம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த 22ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து முதல் நாள் விழாவாக கரகம் பாலிக்கும் நிகழ்ச்சி நேற்று (ஏப்.26) நடைபெற்றது.   இதனையடுத்து இன்று கோயில் முன்பு பொங்கல் வைத்தும், மாவிளக்கேந்தியும் ஆயிரக்கணக்கான சேவல்களை அறுத்து பலியிட்டும்,  கோயில் முன்பு சமைத்து சாப்பிட்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இத்திருவிழா நாளை மஞ்சள் நீருடன் நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags :
Bambalamman TempledevoteesfestivalVelayuthampalayam
Advertisement
Next Article