Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு - தச்சங்குறிச்சியில் தீவிர ஏற்பாடுகளுடன் இன்று தொடக்கம்!

08:42 AM Jan 06, 2024 IST | Web Editor
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் அருகே தச்சங்குறிச்சியில் தமிழ்நாட்டின்  முதல் ஜல்லிக்கட்டு போட்டி காலை தொடங்க உள்ளது.

Advertisement

பொங்கலும்,  ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை.  அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும்,  தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு எனும் புள்ளியில் ஒன்றாய் கைகோர்த்து தங்கள் வேட்கையை வெளிப்படுத்துகின்றனர்.  தைப்பொங்கல் நெருங்க நெருங்க காளைகளும்,  மாடுபிடி வீரர்களும் வாடிவாசலில் இறங்கும் நாளை எதிர்நோக்கி தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தமிழ்நாட்டின்  முதல் ஜல்லிக்கட்டு போட்டி காலை தொடங்க உள்ள நிலையில், அதிகாலை முதலே காளைகளை ஊர்வலமாக அழைத்து வந்து வரிசைப்படுத்த பணி நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : குக்கிராமத்திலிருந்து குடியரசு தின விழாவிற்கு.. : அறவழியில் போராடி அரசின் கவனத்தை ஈர்த்த பழங்குடி தம்பதிகள் - சிறப்பு தொகுப்பு

காலை 8 மணி அளவில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தொடங்கி வைக்க உள்ளனர். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பிற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டப்பட்டுள்ளனர்.

Tags :
Beginsintense preparationsJallikattuPudukottaithachangurichi
Advertisement
Next Article