Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இது விடைபெறுவதற்கான தருணம்” - டி20 உலகக்கோப்பையை வென்ற பின் ரோகித் சர்மா பேட்டி!

11:52 AM Jun 30, 2024 IST | Web Editor
Advertisement

இத்தனை ஆண்டுகள் போட்டிகளை மிகவும் நேசித்து விளையாடியதாகவும், இது விடைபெறுவதற்கான தருணம் எனவும் டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Advertisement

20 அணிகள் பங்கேற்று விளையாடிய டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவடைந்தது. பார்படாஸில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் குவித்தார்.

தொடர் முழுவதுமே சரியாக விளையாடாத விராட் கோலி, இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது.

இதன்மூலம் முதல் முறையாக இறுதிபோட்டிக்கு வந்த தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 17 ஆண்டுகால கனவை நினைவாக்கியது இந்தியா. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் தற்போது கோப்பையைக் கைப்பற்றியுள்ளது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

ஒருநாள் உலகக் கோப்பையை இழந்த ரோகித் சர்மா முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்காகவும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்காகவும் வென்று கொடுத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகான இந்தியாவின் இந்த வெற்றியால் நாடே ஆனந்த கண்ணீரில் மூழ்கியது. வெற்றியைத் தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் தங்களின் ஓய்வையும் அறிவித்தனர் கிரிக்கெட் ஜாம்பவன்களான ரோகித் மற்றும் கோலி.

தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா, “இது தான் என்னுடைய கடைசி டி20 உலகக் கோப்பை போட்டி. இந்தியாவுக்காக விளையாட தொடங்கியதும் இந்த டி20 போட்டி மூலம் தான். இத்தனை ஆண்டுகள் இந்த போட்டியை மிகவும் நேசித்து விளையாடினேன். இது விடைபெறுவதற்கான தருணம். இந்த கோப்பையை வென்று விட்டு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெற வேண்டும் என விரும்பினேன். அவ்வாறே கோப்பையை வென்று விட்டு விடைபெறுவதில் மகிழ்ச்சி” என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Tags :
IndVsSARetirementRohit sharmaT20 International CricketTeamIndia
Advertisement
Next Article