Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kalki 2898 AD படத்தின் ரிலீஸ் தேதி இதுதான் - லேட்டஸ்ட் அப்டேட்!

07:20 AM Jun 02, 2024 IST | Web Editor
Advertisement
மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘கல்கி 2898 AD' (Kalki 2898 AD) படத்தின் மிகவும் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட்களுக்கு கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. கமல்ஹாசன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மதிப்பு இப்போது பல மடங்கு அதிகமாகியுள்ளது.
கல்கி ஏடி 2898 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தின் முதல் பாகத்துக்கானஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான தன்னுடைய 15 நிமிடக் காட்சிகளை நடித்து முடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.
இந்த படம் முதலில் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்னர் இப்போது ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Tags :
#kalki 2898 ad on june 27thapplekalki ad 2898kalki bujji
Advertisement
Next Article