Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக புறக்கணித்தற்குக் காரணம் இதுதான் -பா. சிதம்பரம்!

10:23 AM Jun 16, 2024 IST | Web Editor
Advertisement

விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக புறக்கணித்தற்குக்  காரணம் இதுதான்  என பா. சிதம்பரம் விமர்சித்துள்ளார். 

Advertisement

வருகின்ற ஜூலை மாதம் 10 -ஆம் தேதி தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, ஒவ்வொரு கட்சியில் இருந்தும் இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடவுள்ளதாக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை அறிவித்து இருந்தார்.

அதைப்போல, நாம் தமிழர் கட்சி சார்பாக  மருத்துவர் அபிநயா (இளங்கலை சித்த மருத்துவம் (B.H.M.S., MD) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், இடைத்தேர்தலை குறித்து அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, விக்ரவாண்டியில் நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இருந்து யாரும் போட்டியிட போவதில்லை என்றும், அதிமுக இந்த தேர்தலை புறக்கணிக்கிறது என்றும் அதிகார்பூர்வமாக அறிவித்தார். இதனையடுத்து, பாமகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது பாஜக கூட்டணிலுள்ள பாமகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக தான். அதற்காக தான் அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. பாஜக மற்றும் அதிமுக இரண்டும் பினாமி (PMK) மூலம் போரிடுகின்றன. தி.மு.க. வேட்பாளரின் அமோக வெற்றியை இந்தியா கூட்டணி,  உறுதி செய்ய வேண்டும்” எனவும் பதிவிட்டுள்ளார்.

Tags :
பசிதம்பரம்ADMKvikravandi
Advertisement
Next Article