Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம்” - போட்டிக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு!

11:15 PM May 26, 2024 IST | Web Editor
Advertisement

போட்டியில் முதலில் பௌலிங் செய்தது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். 

Advertisement

ஐபிஎல்2024 ஃபைனலில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா அணி. இதன்மூலம் ஐபிஎல் தொடரை வென்ற 5வது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார் ஸ்ரேயஸ் ஐயர். இவருக்கு முன் தோனி, ரோகித், கம்பீர், ஹர்டிக் ஆகியோர் வென்றுள்ளனர். 2014 ஆண்டிற்கு பிறகு தற்போது கொல்கத்தா அணி கோப்பையை வென்றுள்ளது.

இந்த வெற்றிக்கு பின் பேசிய ஸ்ரேயஸ் ஐயர்,

இன்று போட்டியில் முதலில் நாங்கள் பௌலிங் செய்தது எங்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது. ஹைதராபாத் அணியை பாராட்டியாக வேண்டும். இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடினர். பைனலில் அனைவருக்கும் அழுத்தம் இருந்தது. ஆனால் அந்த சூழலிலும் மிட்சல் ஸ்டார்க் எளிதாக செயல்பட்டார்.

அதேபோல் ரஸ்ஸிடம் ஏதோவொரு மேஜிக் இருக்கிறது. அவரிடம் பந்தை கொடுக்கும் போதெல்லாம் விக்கெட் கிடைக்கும். அதேபோல் வெங்கடேஷ் ஐயர் எங்கள் வெற்றியை எளிதாக்கியுள்ளார். ஒரு குழுவாக இணைந்து வெற்றி பெற்றுள்ளோம். இந்த சீசன் மிகச்சிறந்த சீசனாக எங்களுக்காக அமைந்தது”

என தெரிவித்தார்.

Tags :
CricketIPL2024kkrKKRvsSRHpat cumminsShreyas IyerSRH
Advertisement
Next Article