Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்’.. நடிகர் சித்தார்த் விளக்கம்!

07:42 AM Jun 02, 2024 IST | Web Editor
Advertisement

என்னுடைய முந்தைய திட்டங்களால் ‘இந்தியன் 2’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். 

Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம்  ‘இந்தியன்’. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. இதில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இப்படத்தின் இசை
வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், நடிகர் நாசர், நடிகர் ரோபோ சங்கர், நடிகர் சிம்பு, இயக்குநர் நெல்சன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிரூத், நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்த விழாவில் நடிகர் சித்தார்த் கலந்து கொள்ளவில்லை. பாய்ஸ் படத்திற்கு பிறகு நடிகர் சித்தார்த்துக்கு ஷங்கர் இயக்கத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படி இருக்கையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சித்தார்த் கலந்து கொள்ளாதது ஏன் என ரசிகர்களும், சினிமா வட்டாரங்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இக்கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் சித்தார்த் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “என்னுடைய அன்பையும், வாழ்த்தையும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கருக்கு தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய முந்தைய திட்டங்களினால் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
audio launchindian2Kamal haasanshankarSiddharth
Advertisement
Next Article