Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“‘கல்கி 2928’ படத்தில் நடிக்க இது தான் காரணம்” - நடிகர் கமல்ஹாசன் விளக்கம்!

01:23 PM Jun 20, 2024 IST | Web Editor
Advertisement

‘கல்கி 2928’ படத்தில் நடிக்க வில்லன் கதாபாத்திரம் தான் காரணம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Advertisement

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் கல்கி 2928.  இந்த படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன்,  அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.  இப்படம் வரும் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்நிலையில் இந்த படத்தின் முன்வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன் தனக்கு வில்லன் கதாபாத்திரங்கள் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் பேசிய அவர்,

“நான் எப்போதும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வம் கொண்டவன்.  நாயகன் காதல் பாடல் பாடிக்கொண்டு நாயகிக்காக காத்திருக்கும்போது வில்லன்தான் படத்துக்கு நன்மை செய்வான்.  வில்லன் தனக்கு பிடித்ததை எல்லாம் செய்வான்.  கல்கியில் நான் அதைதான் செய்திருக்கிறேன். மகிழ்ச்சியாக இருந்தது.

இயக்குநர் நாக் அஸ்வினை பாராட்ட வேண்டும்.  சாதாரண மனிதர்கள்தான் அசாதரணமான செயல்களை செய்வார்கள்.  இயக்குநர் கே.பாலசந்தரை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் பார்க்க அரசு அதிகாரி மாதிரி இருப்பார். ஆனால் அவர் அற்புதமான படங்களை இயக்கியுள்ளார்” என தெரிவித்தார்.

Tags :
Deepika padukoneKalki 2928Kamal haasanPrabhas
Advertisement
Next Article