எனது வாழ்க்கையின் திருப்புமுனை இந்தப்படம்: நடிகை கஜோல் நெகிழ்ச்சி!
நடிகை கஜோல், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சினிமா, வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் குறித்து உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார்.
மின்சார கனவு மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமானவர் நடிகை கஜோல். மின்சாரக் கனவு படத்திற்கு முன்பே இந்தியில் ஷாருக் கான் கஜோல் நடித்த ”குச் குச் ஹோத்தா ஹே” படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான ஒன்று. நீண்ட இடைவெளிக்கு பிறகு கஜோல், நடிகர் தனுஷ் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தில் கஜோலின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
அண்மையில் நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ தொடரில் கஜோல் நடித்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது சினிமா, வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் குறித்து உருக்கமான பதிவினை எழுதியுள்ளார். அதில் "உதார் கி ஜிந்தகி படம் வெளியாகி இன்றோடு 29 ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் படத்துக்கு சுருக்கப்பட்ட வேறு பெயர்கள் எதுவுமில்லை. இந்தப்படம் பெரும்பாலான மக்கள் நினைவுகளில் இருக்காது.
என்னை நானே இன்னும் சிறப்பாக நிலைநிறுத்திக்கொள்ள இதெல்லாம் தேவைப்பட்டது. குறிப்பாக எனக்கு தனிப்பட்ட முறையில் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொண்டேன். அப்போதுதான் என்னால் அதிகமான ஈடுபாட்டினை சினிமாவில் கொடுக்க முடியும் எனக் கற்றுக் கொண்டேன். அதை இன்றுவரை பழக்கப்படுத்தி வருகிறேன். அதன் நினைவுகளால் இன்றைய நாளில் இந்தப்பதிவு தேவைப்பட்டது. இந்த அதிவேகமான உலகில் இது அனைவருக்கும் மட்டுமல்லாமல் எனக்குமே ஒரு நினைவூட்டலாக இருக்கும்" இவ்வாறு கூறியுள்ளார்.