Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராமர் கோயில் பிரதிஷ்டை விழா - ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் இட சொல்லிய பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்...!

08:13 PM Jan 23, 2024 IST | Web Editor
Advertisement

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை ஒட்டி திருவாரூர் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் இட சொல்லிய பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement

திருவாரூர் நகர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் ஜி.ஆர்.எம் பெண்கள்
மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றதை ஒட்டி பள்ளி கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படியுங்கள் ; மிசோரம் அருகே மியான்மர் ராணுவ விமானம் விபத்து: 6 பேர் படுகாயம்!

அப்போது பள்ளி மாணவிகளை ஜெய்ஸ்ரீராம் என முழக்கம் எழுப்புமாறு பள்ளி நிர்வாகத்தினர் சொல்லியுள்ளனர்.

இந்தப் பள்ளியில் பிற மதத்தை சேர்ந்த மாணவிகள் பயின்று வரும் நிலையில் சர்ச்சைக்குரிய ஜெய் ஸ்ரீ ராம் என்கிற வாசகத்தை முழக்கம் இட கூறியது பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் பள்ளி வளாகத்தில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Tags :
AyodhyaceremonyconsecrationGRM women Secondary SchoolJai Sri RamProtestram templestudentsthiruvarur
Advertisement
Next Article