Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“திருவள்ளூர் ரயில் விபத்து - மீட்பு பணிகள் துரிதமாக நடைபெறுகிறது!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

11:45 PM Oct 11, 2024 IST | Web Editor
Advertisement

திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. இந்நிலையில், மீட்பு பணிகளில் அரசு துரிதமாக செயல்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்தது:

“திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தகவல் கிடைக்கப்பெற்றவுடன், அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன்.

மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கெனத் தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது.

விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்” என்றார்.

கவரைப்பேட்டையில் விபத்து நடைபெற்ற இடத்தில் அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சீ சென்று ஆறுதல் கூறினார்.

Tags :
Accidentnews7 tamilNews7 Tamil UpdatesthiruvallurTrain
Advertisement
Next Article