Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#ThirupatiLaddu | “அரசியலுக்காக கடவுள் பெயரை பயன்படுத்துவது கீழ்த்தரமானது” - ஜெகன் மோகன் ரெட்டி பேட்டி!

04:19 PM Sep 20, 2024 IST | Web Editor
Advertisement

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு சொன்ன குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், அரசின் தோல்விகளை மறைப்பதற்காக திருப்பதி நெய் விவகாரத்தை சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளதாகவும் ஒய்எஸ்ஆர். காங். தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரான ஓய்.எஸ்.ஷர்மிளா கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து, நேற்று (செப். 19) லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, கிடைத்த அறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் பாமாயில் எண்ணெய் கலந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இன்று (செப். 20) மாலைக்குள் முழுமையான அறிக்கை அளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு சொன்ன குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவே எங்கள் அரசு மீது சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டுகிறார். கடவுளின் பெயரால் அவர் அரசியல் செய்கிறார். இவை சந்திரபாபு நாயுடுவின் திசை திருப்பும் உத்திகள். யாராவது இப்படிச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? 

திறன் மேம்பாட்டு கழக முறைகேடு வழக்கில் கைது செய்ததற்காக பழிவாங்குகிறார் சந்திரபாபு நாயுடு. அரசின் தோல்விகளை மறைப்பதற்காக திருப்பதி நெய் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். சந்திரபாபு நாயுடு சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கட்டுக்கதைகள். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. தேசிய அளவிலான அங்கீகாரம் வாங்கும் நிறுவனங்களிடமிருந்தே நெய் கொள்முதல் செய்யப்பட்டது. எங்களது ஆட்சியில் டெண்டர் நடைமுறையில் மாற்றம் செய்யவில்லை. மாமிச கொழுப்பு கலந்ததாக பொய் கூறுவது நியாயமா?

சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகள் பலரும் வீதிக்கு வந்துள்ளனர். தர்மத்துக்கு எதிரான செயல்பாடுகள் இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளது. பொய் வழக்குகளை போடுவதையே முதன்மையானதாக கொண்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. அவர் அனைத்து விசயங்களையும் திசை திருப்புகிறார். அரசியலுக்காக கடவுளின் பெயரை அவர் பயன்படுத்துவது கீழ்த்தரமானது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் மீது சந்திரபாயு நாயுடு அரசு பொய் வழக்குகளை பதிவு செய்கிறது. எனது ஆட்சிக்காலத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை"

இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
Andhra PradeshChandrababu NaiduGheeJegan Mohan ReddyNews7TamilTirupathi LaddooYRS Congress
Advertisement
Next Article