Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Tirupati லட்டு விவகாரம் | சந்திரபாபு நாயுடுவை கேள்விகளால் அதிர வைத்த உச்சநீதிமன்றம்!

03:14 PM Sep 30, 2024 IST | Web Editor
Advertisement

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பொதுவெளியே இப்படி பேசியது ஏன் என்று சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Advertisement

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியது ஆந்திர அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர். திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்திவிட்டனர் என்று குற்றச்சாட்டு வைத்தார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஆந்திரா அரசு சார்பில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்பியும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான சுப்பா ரெட்டி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், அந்த மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற விசாரணை இன்று (செப்டம்பர் 30ம் தேதி) நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

இதையும் படியுங்கள் :அரிசி சாப்பிட்டு #Guinness உலக சாதனை படைத்த பெண்…இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சுப்பரமணியன் சாமி தரப்பில் தெரிவித்ததாவது :

இந்த விவகாரம் பல கோடி பக்கதர்களின் நம்பிக்கை சார்ந்த்து. திருப்பதி லட்டுவில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று பொதுவெளியில் கூறுவது என்பது மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலானது. குறிப்பாக குற்றம்சாட்டப்பட்ட அந்த நெய் என்பது பயன்படுத்தப்படவில்லை என பின்னர் கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் உணர்வுபூர்வமான விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் இவ்வாறான பொறுப்பற்ற கருத்தை கூறுவது எத்தகையது?

பிரசாதம் தொடர்பாக சந்தேகம் இருந்தால் அது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும் ஒரு உயர்ந்த பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் பொறுப்பற்ற ஒரு கருத்தை கூறுவது எத்தைகயது?நிராகரிக்கப்பட்ட பிரசாதம் அல்லது பிரசாதத்தை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா? இந்த விவகாரத்தல் அரசு தலையீடு அனுமதிக்கலாமா?

ஆந்திரபிரதேச அரசு தரப்பில் தெரிவித்ததாவது :

இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எந்த மனுக்களும் அனுமதிக்கபட்டவை அல்ல. சுப்பிரமணியன் சாமி எப்படி திருப்பதி தேவஸ்தானம் சார்பாக மனு தாக்கல் செய்ய முடியும்? யார் அனுமதி கொடுத்தார்கள்?

நீதிபதிகள் தரப்பில் தெரிவித்ததாவது :

இந்த பிரசாதம் விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கபட்டதென்றால், ஏன் பொது வெளியில் சென்று கருத்தை தெரிவிக்க வேண்டும்? கடவுள் விவகாரத்தில் அரசியலை தள்ளி வைக்க வேண்டும் என விரும்புகிறோம்? சிறப்பு விசாரணை குழு முடிவு வெளிவரும் வரை பொறுமை காக்காமல் ஏன் பத்திரிக்கை சந்திப்பில் அது தொடர்பாக தெரிவிக்க வேண்டும்? இந்த விவகாரம் எனபது ஒரு லட்சம் , இரண்டு லட்சம் பக்தர்களை சார்ந்த்து அல்ல மாறாக கோடான கோடி பக்தர்களின் உணர்வுகளை சார்ந்த விஷயம் எனவே இதில் அரசியல் கூடாது. மேலும் அந்த கலப்பட நெய் தான் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதா? என்பதற்கு தெளிவு இல்லையே. இதில் எதற்கும் தெளிவான பதில் இல்லையே ? அப்படி இருக்கையில் ஆந்திர முதலமைச்சர் ஏன் பத்திரிக்கை சந்திப்பில் இந்த விவகாரத்தை தெரவிக்க வேண்டும் ?

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்ததாவது :

இந்த விவகாரம் என்பது நம்பிக்கை, உணர்வு சார்ந்த விவகாரம், எனவே இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க வேண்டும்.

நீதிபதிகள் தரப்பில் தெரிவித்ததாவது :

"லட்டுவில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லையே? மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவே விசாரணை நடத்தலாமா? அல்லது வேறு விசாரணை அமைப்பை அமைக்கலாமா? ஆந்திர முதலமைச்சரின் பொதுவெளி கருத்து பக்தர்களின் உணரவுகளை பாதிக்கும் என்பதை அறியவில்லையா? சிறப்பு விசாரணை க்குழு அமைத்த பின்னர் ஏன் பொதுவெளியில இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் கருத்து தெரிவிக்க வேண்டும்? மேலும் ஆந்திர முதலமைச்சரின் இந்த கருத்து சிறப்பு விசாரணை குழுவின் புலன்விசாரணையை பாதிக்காதா?

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திரா சிறப்பு புலனாய்வு குழு அமைக்கும் முன்னரே முதலமைச்சர் பொது வெளியில் கருத்து வெளியிட்டுள்ளார், எனவே இந்த விவகாரத்தில் அரசு நியமித்துள்ள சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டுமா? வேறு குழு அமைக்க வேண்டுமா? என்பது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் கருத்தை அறியவும் அந்த விவகாரம் தொடர்பாக குறித்து முடிவு எடுக்க வழக்கு அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது"

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
ChandrababuNaidujaganmohanreddyNews7Tamilnews7TamilUpdatesTirupatiTirupatiLadduVenkateswaraTempleYSRCP
Advertisement
Next Article