கோலாகலமாக நடைபெற்ற திருமயம் புனித அடைக்கல அன்னை ஆலய செபஸ்தியார் திருவிழா! -ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு...!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் செபஸ்தியார்
திருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் தேர் பவனி சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த வருட செபஸ்தியார் திருவிழா நேற்று (பிப்.06) நடைபெற்றது.
நேற்று (பிப்.06) மாலை சிறப்பு திருப்பலி கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செபஸ்தியார் சிலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து இரவு தேர் பவனி வான வேடிக்கைகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அனைத்து மதத்தினரும் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்: காளஹஸ்தி கோயில் ராகு, கேது பூஜையில் ரஷ்ய நாட்டு பக்தர்கள்!
கோயில் ராமாயணமடம் மற்றும் சந்தைபேட்டையில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக தேர் பவனி நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இத்திருவிழாவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.