Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு திருமாவளவன் வாழ்த்து

மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள மநீம கட்சித்தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
03:00 PM Jul 17, 2025 IST | Web Editor
மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள மநீம கட்சித்தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Advertisement

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன்  கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெற்றார்.  ஜூலை 25ஆம் தேதி அவர் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கூட்டணிக் கட்சி தலைவர்களும் திரைத்துறையினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின் போது விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்  உள்ளிட்டோர் உடனிருந்தனர். இது குறித்து தனது எக்ஸ் தளப் பதிவிட்டுள்ள திருமாவளவன்,

”திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமலஹாசன் @ikamalhaasanஅவர்களை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்!”  என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :
KamalhassanlatestNewsMNMmpthirumavalavanTNnewsVCK
Advertisement
Next Article