Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விசிக சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் மீண்டும் போட்டி!

12:02 PM Mar 19, 2024 IST | Web Editor
Advertisement

திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சிதம்பரத்தில் திருமாவளவன் மற்றும் விழுப்புரத்தில் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். 

Advertisement

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில், அக் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

“நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம். விழுப்புரம் தொகுதியில் மீண்டும் ரவிக்குமார் போட்டியிடுகிறார். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி. சிதம்பரம் தொகுதியில் நான் 6 வது முறையாக போட்டியிடுகிறேன். இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. 10 ஆண்டுகால ஆட்சியில் இருந்த பாஜக நாட்டின் வளர்ச்சி பற்றி பேசினார்களே, தவிர அதை கண்கூடாக பார்க்க முடியவில்லை. ஆனால் அம்பானி, ஆதானி போன்றவர்கள் பணக்காரர்கள் பட்டியலில் உயர்ந்துள்ளார்கள். 

நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. ஆனால் அதானி, அம்பானி வளர்ச்சி அடைந்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவது தான் மக்களின் வேட்கையாக உள்ளது. பாஜகவினர் EVM வைத்து ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள். அதனால் மக்கள் 100% வாக்களிக்க வேண்டும். பாஜக 2வது பெரிய சக்தியாக மாற முயற்சிக்கிறது. பெரியாரை அவமதிக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி பூசி அவமதிக்கிறார்கள்.

திமுக-அதிமுக தனி தனியே போட்டியிட்டாலும், சமூக நீதி என்றால் ஒன்றாக போராடுவார்கள். பாஜக கூட்டணியில் பாமாக இணைவது அவர்கள் விருப்பம். OBC மற்றும் MBC மக்களுக்கு விசிக அரணாக இருந்து வருகிறது. திமுக அணியில் 2018 இருந்து ஒரே அணியாக இருக்கிறோம். 0 1 என்றால் ஒரு மதிப்பு தான். பாஜக 0 பாட்டாளி மக்கள் 1 என்றாலும் எண்ணிக்கை அதிகரிக்க போவதில்லை. தமிழ்நாட்டில் பாஜக கால் ஊன்ற நினைப்பது புதிதல்ல” இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
#ViluppuramElection2024Elections2024Loksabha Elections 2024News7Tamilnews7TamilUpdatesParliament Election 2024RavikumarTamilNaduthirumavalavan
Advertisement
Next Article