Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Thiruchendur கந்த சஷ்டி திருவிழா | 2-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் கோலாகலம் - ஏராளமானோர் பங்கேற்பு!

11:09 AM Nov 03, 2024 IST | Web Editor
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 2-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.3) கோலகலமாக நடைபெற்றது.  

Advertisement

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழா நேற்று (நவ.2) காலை 7 மணியளவில் யாகசாலை பூஜையுடன் கோலகலமாக தொடங்கியது. இதனையடுத்து, தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை நிற உடை அணிந்து நேற்று முதல் விரதம் இருக்க துவங்கினர்.

தொடர்ந்து, 7 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் 2ம் நாளான இன்று அதிகாலை 3 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை அம்பாளுடன் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளிய நிலையில், யாகசாலை பூஜைகள் வெகுவிமரிசயாக நடைபெற்றது.

இதனையடுத்து, சுவாமிகளுக்கு தீபராதனை காட்டப்பட்டது. சுவாமி ஜெயந்திநாதருக்கு பால், பழம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் விரதம் இருக்கக்கூடிய ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது. பக்தர்களின் வசதிக்காக நமது நியூஸ்7 தமிழ் சார்பில் கோயில் பிரகாரங்களில் பெரிய அகன்ற திரைகள் வைக்கப்பட்டு திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும், நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் நியூஸ்7 தமிழ் பக்தி யூடியூப் சேனலிலும், நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

Tags :
Kanda Shasthti Festivalmurugan templenews7 tamilThoothukuditiruchendurYagasala Pujas
Advertisement
Next Article