#Thiruchendur கந்த சஷ்டி திருவிழா | 2-ஆம் நாள் சிறப்பு அபிசேகம் – திரளான பக்தர்கள் தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 2-ஆம் நாளான இன்று சுவாமி ஜெயந்திநாதர்க்கு 16 வகையான சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான
உலகப் புகழ் பெற்ற கந்தசஷ்டி திருவிழா நேற்று காலை யாசாலை பூஜையுடன் துவங்கி
நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி
மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கோயிலில் தங்கி
விரதம் இருந்து வருகின்றனர்.
தொடர்ந்து 7 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் இத்திருவிழாவின் இரண்டாம் நாள் திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. யாகசலை பூஜையை தொடர்ந்து பூர்ணாகுதி மற்றும் தீபராதனை நடைபெற்றது. பின்னர், சுவாமி ஜெயந்தி நாதர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலித்தார்.
இதையும் படியுங்கள் :சைக்கிள் ஓட்டும்போது #Phone பேசினால் 6 மாதம் சிறை… எங்கு தெரியுமா?
கந்த சஷ்டி திருவாடுதுறை ஆதீன மண்டபத்தில் வைத்து சுவாமி ஜெயந்திநாதர்க்கு பால் பழம் பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், திருநீர், மஞ்சள் மற்றும் குங்குமம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிசேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.