வரதராஜ பெருமாள் கோயிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தவாரி! - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகு சக்கரத்தாழ்வார்
தீர்த்தவாரி நடைபெற்றது.
சென்னை பூந்தமல்லி அருகே மிகவும் பழமையான திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 70 ஆண்டுகளுக்குப் பின்னர் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மே 20ம் தேதி தொடங்கி இன்று (மே 29ம் தேதி) வரை நடைபெறுகிறது. இந்த வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி சாமி சிம்மா வாகனம், யாளி வாகனம், கருட வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, அனுமந்த வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முன்னதாக புஷ்பவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாள் மற்றும் திருக்கச்சி
நம்பிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ அலங்காரமும், சிறப்பு பூஜைகளும்
நடைபெற்றன. நாள்தோறும் காலை மற்றும் மாலை திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : ஏடிஹெச்டி பிரச்னை என்றால் என்ன? இது சரி செய்யக்கூடியதா?
பிரமோற்சவ விழாவையொட்டி திருமஞ்சனம் செய்து மோனா பல்லக்கில் சாமி
எழுந்தருளினார் . இதனைத் தொடர்ந்து 70 ஆண்டுகளுக்குப் பின்னர் சக்கரத்தாழ்வார்
கோயில் திருக்குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி சிறப்பாக
நடைபெற்றது. இந்த வைகாசி பிரம்மோற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.