Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கல்வி, வேலைவாய்ப்பில் 3-ம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும்" - தமிழ்நாடு அரசுக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவு!

11:59 AM Jun 13, 2024 IST | Web Editor
Advertisement

கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள துணைக் கண்காணிப்பாளர்,  துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்,  உதவி ஆணையர் (வணிகவரி),  நில நிர்வாகத்தின் துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப TNPSC தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே,  கடந்த 2017 – 18ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 ஏ தேர்வில் கலந்து கொண்ட மூன்றாம் பாலின விண்ணப்பதாரரான அனுஸ்ரீ என்பவர்,  சான்றிதழ் சரிபார்ப்புக்கு தன்னை அனுமதிக்கவில்லை என வழக்கு
தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்,  மூன்றாம் பாலினத்தவர்களை சமூக, கல்விரீதியாக பின்தங்கியவர்கள் எனக் கருதி,  கல்வி,  வேலைவாய்ப்பில் அனைத்து விதமான இடஒதுக்கீட்டு சலுகைகளையும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 2014 ம் ஆண்டு தீர்ப்பளித்தை சுட்டிக்காட்டினார்.

அனுஸ்ரீ

ஆனால் மத்திய அரசோ, மாநில அரசோ இதுவரை இதுசம்பந்தமான விதிகளை வகுக்கவில்லை என வாதிட்டார்.  இதனால்  மூன்றாம்ம் பாலினத்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் அவலமான நிலையில் வாழ்க்கை நடத்த வேண்டிய சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதி,  கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு
போதுமான வாய்ப்பை வழங்கி,  தரமான வாழ்க்கையை வாழ வைக்க வேண்டியது அரசின் கடமை என்றார்.  மூன்றாம் பாலினத்தவர்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு ஆண்களாகவோ, பெண்களாகவோ கருதாமல் தனி பிரிவினராக கருதி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக பிரத்யேக
விதிகளை வகுக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை
ஆண்கள், பெண்கள் பிரிவில் சேர்க்க கூடாது எனவும் அறிவுறுத்திய நீதிபதி,  மனுதாரரின் சான்றிதழை சரிபார்க்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags :
chennai High Courtgroup2ATN GovtTNPSC
Advertisement
Next Article