Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மூன்றாவது குழந்தை பிறந்திருக்கிறது - நடிகர் சிவகார்த்திகேயன் அறிவிப்பு!

06:00 PM Jun 03, 2024 IST | Web Editor
Advertisement

மூன்றாவது குழந்தை பிறந்திருக்கிறது என நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தியை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ளார் என்று அவர் பொதுவெளியில் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதை உறுதி செய்து நடிகர் சிவகார்த்திகேயன் மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“எங்களுக்கு நேற்று (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்ற செய்தியை பெருமகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும் ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டும் என்று வேண்டுகிறோம். நன்றி” எனக் கூறியுள்ளார்.

Tags :
ChildNew BornNews7Tamilnews7TamilUpdatessivakarthikeyanSK
Advertisement
Next Article