Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"காந்தி முகத்தில் முழிக்கக்கூடாதென நினைக்கிறார்கள்" | #Parliament -ல் சிலை இடமாற்றம் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

08:47 AM Oct 03, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்றத்தின் முன்புற வாசலின் முன்பு இருந்த மகாத்மா காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற வளாகத்தின் வாசல் முன் இருந்த காந்தி சிலை உட்பட வெவ்வேறு இடங்களில் இருந்த தலைவர்களின் சிலைகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பின்னே உள்ள பூங்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. பாஜக அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் நேற்று (அக். 2) காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டதை ஒட்டி மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மீண்டும் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) எக்ஸ் வலைதள பக்கத்தில்,

“நாடாளுமன்றத்தின் முன்புற வாசலின் முன்னே இருந்த உனது திருவுருவச் சிலை இப்பொழுது பின்புற வாசலுக்கும் பின்னே வைக்கப்பட்டுள்ளது. பாசிஸ்டுகள் அவைக்குள் வருகிற பொழுது உன் முகத்தில் முழிக்கக்கூடாதென நினைக்கிறார்கள். நீ அல்லவோ எம் தேசத்தின் தந்தை. வாழ்க நீ எம்மான். என்றென்றும் வணங்குகிறோம் உன்னை" என அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :
cpimDMKmahatma gandhiNews7Tamilparliamentstatuesu venkatesan
Advertisement
Next Article