Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேவர் ஜெயந்தி - தவெக தலைவர் விஜய் மரியாதை!

தவெக தலைவர் விஜய் முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
02:40 PM Oct 30, 2025 IST | Web Editor
தவெக தலைவர் விஜய் முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
Advertisement

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

Advertisement

இந்த நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் விஜய் வெளியிட்டுள்ள பதிவில்,

"விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Thevar Jayantitributetvkvijay
Advertisement
Next Article