Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தமிழ் திரையுலகிலும் பாலியல் சீண்டல்கள் உள்ளன.. யாருடைய பெயரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை..” - நடிகை #Raadhika பேட்டி!

06:03 PM Sep 02, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ் திரையுலகிலும் பாலியல் புகார்களை விசாரிக்க ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து சென்னையில் நடிகை ராதிகா சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“4 நாட்களுக்கு முன்பு என்னை எஸ்ஐடியில் இருந்து தொடர்பு கொண்டார்கள். நான் விளக்கத்தை மட்டும் கொடுத்தேனே தவிர புகார் ஏதும் அளிக்கவில்லை. படித்த இளைஞர்கள் நிறைய பேர் வந்துவிட்டார்கள். அதனால் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது. என்னுடைய வாழ்க்கையில் எந்த பிரச்னைகள் வந்தாலும் நான் தனியாகதான் எதிர்கொண்டுள்ளேன். இப்போது வரை பெண்கள் போராடிதான் வருகிறோம்.

80-களில் இருந்து நான் பார்க்கிறேன். தமிழ் திரையுலகிலும் பாலியல் சீண்டல்கள் இருக்கிறது. யாருடைய பெயரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை. இப்போது பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ இது போன்று நடந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் கூறியிருக்கிறார். இது மனதிற்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. தமிழ் திரையுலகில் பெண்களை பாதுகாக்க வேண்டியது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருடைய பொறுப்பு. அவர்களுக்கான தனி கழிவறை, உடை மாற்றும் அறை என இருக்க வேண்டும்.

விஷால் தமிழ் திரையுலகிற்கு ஹேமா கமிட்டி போன்று அமைக்கப்படும் என கூறியிருக்கிறார். அவர் இதுகுறித்து அறிவுறை ஏதும் என்னிடம் கேட்டால் அறிவுறை கூற தயார். சமூகத்தில் ஒவ்வொறு நடிகைக்கும் ஒரு கதை இருக்கிறது. ஆனால் தவறு செய்யும் ஆண்களைதான் இந்த உலகம் தூக்கி வைத்து பேசுகிறது. ஹேமா கமிட்டி குறித்து முன்னனி நடிகர்கள் மெளனம் காத்தால் தவறாகதான் தெரியும். நடந்த குற்றங்களுக்கு முன்னனி நடிகர்கள் ஆதரவாக செயல்படுவது போலதான் தெரியும்.

வெளிநாடுகளில் இருப்பது போன்று இங்கு தமிழ் திரையுலகில் சில மாற்றங்களை செய்தால் செலவினங்களை குறைக்கலாம். நாங்கள் நடிக்கும் காலத்தில் மானிட்டர் கிடையாது. ஆனால் இப்போது நடிக்கும் நடிகர்கள் அனைவரும் ஒரு ஷாட் முடிந்தவுடன் அடிக்கடி மானிட்டர் பார்க்க செல்கின்றனர். எதற்கு ஒரு காட்சிக்கு 20 கேமராக்கள் ? நடிகர்களாக உள்ளவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அரசியல் ஆசை உள்ளது. அரசியலுக்கு சென்று அங்கு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் நடிகர்கள் இன்று உடன் பணியாற்றும் நடிகைகளுக்காக துணை நிற்கலாமே?

தமிழ் திரையுலகிலும் பாலியல் புகார்களை விசாரிக்க ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். இது போன்ற பிரச்னைக்கு உடனடி தீர்வு தேவை. நீதிமன்றத்திற்கு சென்றால் சாட்சி எங்கே? என கேட்பார்கள். பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பொழுது பாதிக்கப்பட்டவர்கள் எப்படி அதை படம் பிடிக்க முடியும்? எனவே சட்டத்தை நாடுவதில் சிக்கல் உள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
ChennaiHema CommitteeKeralaKollywoodmollywoodNews7TamilRaadhika Sarathkumar
Advertisement
Next Article