Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”கமல் பேசியதில் தவறு இல்லை, அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது” - வைகோ பேட்டி!

கமல் பேசியதில் தவறு இல்லை, அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது என மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.
04:27 PM Jun 05, 2025 IST | Web Editor
கமல் பேசியதில் தவறு இல்லை, அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது என மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.
Advertisement

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisement

அப்போது அவர் பேசியதாவது, “ஜூன் 22 ஈரோட்டில் மதிமுக பொதுக்குழு நடத்தவுள்ளது. அடுத்த தேர்தல் காலம் வரையிலான திட்டங்களை பொதுக்குழுவில் எடுத்து வைக்க இருக்கின்றோம் பெங்களூரில் 11 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரியது. முன்கூட்டியே விபரீத மரணங்கள் நிகழக்கூடும் என உளவு துறை யூகித்து ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.  மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்து இருக்கின்றோம்.

உலகில் இருக்கும் மொழியில் வல்லுநர்கள், அறிஞர்கள் மூத்த மொழி தமிழ்மொழிதான் என சொல்லி இருக்கின்றனர். வட மொழி, கிரேக்கம், லத்தின் , எகிப்து மொழி போன்றவற்றை விட மிக தொன்மையான மொழி தமிழ் மொழி.      இதனால்தான் நீராடும் கடலொடுத்த பாடலை மனோன்மணியம் சுந்தரனார் இயற்றினார். மலையாளம்,கன்னடம் தமிழில் இருந்து உதித்தது என பாடி இருக்கின்றார். திமுக கூட்டங்களில் இந்த கருத்துதான் பாடலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

வடமொழியை விட மூத்த மொழி தமிழ்மொழி.  கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது.  முருகன் மாநாட்டில்
மதத்தை வைத்து அரசியல் நடத்த இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. தமிழ்நாட்டில் ஒலித்த மொழி உணர்வு பிற மாநிலங்களில் கேட்பது நல்ல திருப்பம்.

அதிமுக ஆட்சியில் ஏராளமான தவறுகள் நடந்தது. மக்கள் பாதிக்கப்பட்டபோது அவர்கள் எதுவும் செய்யவில்லை. எதிர்வரிசையில் இருப்பதால், கற்பனையோடு பேசுகின்றார் எடப்பாடி பழனிசாமி. அதை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை மதிமுக சார்ரபில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் ஒலித்த குரல் இன்னும் பதிந்து இருக்கின்றது. திமுக மாநிலங்களவை பொறுப்பை கொடுத்தார்கள், அதற்கு நன்றி தெரிவித்து கொள்கின்றோம். மதிமுக திமுகவிற்கு துணை நிற்கும். நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை தவெக பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை”

இவ்வாறு மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளர்.

Tags :
Kamal haasanKarnatakaMDMKThug LifeVaiko
Advertisement
Next Article