Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை" - அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

07:25 PM Mar 10, 2024 IST | Web Editor
Advertisement

"என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை" என அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

விசிகவில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்துவரும் நவீனத்துவ மாற்றங்களுக்கு பின்னணி நபராக அறியப்பட்ட பிரபல தேர்தல் வியூக நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons) நிறுவனத்தின் தலைவரான ஆதவ் அர்ஜுனா விசிக-வின் துணைப்பொதுச்செயலாளர் என்கிற முக்கிய பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.விசிக-தலைமை அலுவலகத்தில் கடந்த 15-02-24 அன்று நடந்த கட்சியின் உயர்நிலைக்குழு நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி.

சமீபகாலத்தில் விசிகவில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் நியமனம், பூத் கமிட்டி கூட்டம் தொடங்கி, அண்மையில் திருச்சி சிறுகனூரில், மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்ட விசிகவின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு வரை, கடந்த ஓராண்டில் விசிகவில் நிகழ்ந்துவரும் தலைகீழ் மாற்றங்களுக்கும், சிறுத்தைகளின் அடுத்தப் பாய்ச்சலுக்கும் பின்புலமாகவும், திருமாவளவனுக்கு பக்கபலமாகவும் செயல்பட்டு வருபவர்தான் Voice Of Commons நிறுவனத்தின் தலைவர் ஆதவ் ஆர்ஜுனா.

இந்தநிலையில் சனிக்கிழமை அன்று சென்னையில் 6 இடங்களில் பிரபல தொழிலதிபர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியது. இதில் விசிக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனாவின் வீடும் ஒன்றாகும். நேற்று தொடங்கிய இந்த சோதனை இன்று நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து விசிக துணைப் பொதுச்செயலாளார் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

“ எனது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருந்தது.  நேற்று (09.03.2024) காலை தொடங்கி இன்று காலை வரை ஒருநாள் சோதனை நடத்தப்பட்டது. பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மையோடு இருக்கவேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.

அதனடிப்படையில் சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது. இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் யாரும் இடம் தரவேண்டாம்.

என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழிநின்று உறுதியோடு எனது பயணம் தொடரும்.”

Tags :
Aadhav ArjunaAdhav Arjunaed raidVCK
Advertisement
Next Article