"நான் மனிதப்பிறவியாக இருக்க வாய்ப்பில்லை..." - பிரதமர் நரேந்திர மோடி!
சாதாரண மனிதர்களைப் போல பயலாஜிகலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 5 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், 6ம் கட்ட தேர்தல் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது.
பீகாரில் 8 தொகுதிகள், ஹரியானாவில் 10 தொகுதிகள், ஜம்மு – காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரசியல் தலைவர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில், "சாதாரண மனிதர்களைப் போல பயலாஜிகலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை" என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள் : “காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க முடியாது” – போக்குவரத்துத்துறை அதிரடி!
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:
"நான் பயலாஜிகலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன். மனிதப் பிறவியாக இருக்க வாய்ப்பில்லை. என்னை பூமிக்கு அனுப்பியது பரமாத்மாதான். ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காகக் கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார். நான் பெற்றிருக்கும் ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருப்பது கிடையாது. கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மோடியின் இந்தக் கருத்து தற்போது ஊடகங்களில் வைரலாகி மாறுபட்ட விமர்சனங்களைத் ஏற்படுத்தி வருகிறது.