Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இல்லை" - திருமாவளவன் பரபரப்பு பேட்டி

வேங்கை வயல் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
07:23 PM Jan 25, 2025 IST | Web Editor
வேங்கை வயல் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Advertisement

சென்னையில் மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாளமுத்து நினைவிடத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று மரியாதை செலுத்தினர். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;

Advertisement

"தந்தை பெரியாருக்கு எதிராக அவதூறு பரப்புவது மிகவும் கண்டிக்கத்தக்கது. சனாதன எதிர்ப்பில் அம்பேத்கருக்கு இணையாக பெரியார் இருந்தார். சீமானின் போக்கு கவலையும் அதிர்ச்சியும் தருவதாக உள்ளது. ஆபத்தான அரசியல் பேசுகிறார். வேங்கை வயலில் போராடும் விசிகவினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வேங்கை வயல் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இல்லை.

இதையும் படியுங்கள் : “அரசுப் பள்ளிகள் குறித்த அக்கறை சிறிது கூட தமிழ்நாடு அரசுக்கு இல்லை” – #Annamalai குற்றச்சாட்டு

சிபிசிஐடியின் விசாரணை ஏமாற்றம் அளிக்கிறது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குப்பதிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை, நீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் ஏற்கக் கூடாது. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு துணையாக இருக்கும் என நம்புகிறோம்."

இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article