Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு இல்லை" - நேரில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

11:22 AM Dec 08, 2023 IST | Web Editor
Advertisement

சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement

கனமழையால் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், அத்தியாவசியத் தேவைகளான பால், குடிநீர், உணவு ஆகியவை கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறைவான அளவு பால் வந்ததால், அதை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவானது.

பல இடங்களில் ஆவின்,  தனியார் நிறுவன பால் பாக்கெட்கள் விலையை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்தனர்.  இந்நிலையில், ஆவின் பால் விநியோகம் வியாழக்கிழமை சீராகிவிடும் என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் ஆவின் பாலகங்களில் மேற்கொண்ட ஆய்வுக்குப் பின் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.  அப்போது பேசிய அவர்,  சென்னையில் 100 சதவீதம் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 30 இடங்களில் ஆய்வு மேற்கொண்டேன். 30 இடங்களிலும் பால் தட்டுப்பாடு இல்லை. பால் தட்டுப்பாடு விவகாரம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article