Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நாட்டில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய ஆதரவான கொள்கை இல்லை" - ராகுல் காந்தி!

இந்தியாவில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய ஆதரவான கொள்கை இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்
05:37 PM Jul 19, 2025 IST | Web Editor
இந்தியாவில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய ஆதரவான கொள்கை இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்
Advertisement

இந்தியாவில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய விரும்புகிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஆதரவான கொள்கை இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் தளப்பதிவில்

Advertisement

”இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான தொலைக்காட்சிகளின் 80% பாகங்கள் சீனாவிலிருந்து வருகின்றன. ‘மேக் இன் இந்தியா’ என்ற பெயரில், நாம் பொருட்களை இணைக்கிறோமே தவிர உண்மையிலேயே உற்பத்தி செய்யவில்லை. ஐபோன்கள் முதல் தொலைக்காட்சிகள் வரை தயாரிக்கத் தேவையான பாகங்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றன,  அவற்றை நாம் ஒன்றாக இணைக்கிறோம்.

நாட்டில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுக்கு ஆதரவான கொள்கைகள் இல்லை. மாறாக, அதிக வரிகளும், கார்போரெட் நிறுவனங்களுமே நாட்டின் தொழில்துறையை கைப்பற்றியுள்ளது. இந்தியா உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வரை, வேலைவாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் "மேக் இன் இந்தியா " போன்ற பேச்சுக்கள் வெறும் பேச்சுக்களா மட்டுமே இருக்கும். இந்தியா ஒரு உண்மையான உற்பத்தி சக்தியாக மாற வேண்டுமென்றால், அடிமட்ட அளவில் மாற்றம் தேவை”

என தெரிவித்துள்ளார்.

https://x.com/RahulGandhi/status/1946487932711252184

Tags :
IndiaNewslatestNewsmakeinindiamanufactteringrahulghandhi
Advertisement
Next Article