“முந்தா நாள் தோன்றிய கட்சிக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை” - தவெக தலைவர் விஜய்க்கு டி.ஆர்.பாலு எம்.பி பதிலடி!
தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் விஜய் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய விஜய், ஒரே ஒரே குடும்பம் மட்டும் நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா? மக்கள் பிரச்னைகளை மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சியை மன்னராட்சி போல் நடத்தும் இவர்கள் நமக்கு எதிராக பண்ணுகிற செயல்கள் ஒன்றா, இரண்டா” எனக்கூறி திமுக அரசை விமர்சித்தார். மேலும் 2026ல் திமுக vs தவெக தான் என்று கூறினார்.
அதோடு மத்தியில் ஆளும் பாஜக அரசை, தமிழ்நாட்டிலிருந்து தரும் ஜிஎஸ்டியை வாங்கிக் கொள்கிறீர்கள். ஆனால், தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவதில்லை. படிக்கும் பிள்ளைகளின் கல்விக்கு நிதி ஒதுக்குவதில்லை. ஆனால், மும்மொழிக் கொள்கையை திணிக்கிறீர்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்கள் ஆரம்பித்தபோதே புரிந்துவிட்டது. தமிழ்நாட்டை கொஞ்சம் கவனமா Handle பண்ணுங்க சார், ஏன்னா தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டுன ஸ்டேட், பாத்து சார். மறந்துடாதீங்க சார் என்று விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் திமுக மீதான விஜய்-ன் விமர்சனத்திற்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக திருவள்ளூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசிதாவது, “முந்தா நாள் தோன்றிய விஜய் கட்சிக்கு 64 ஆண்டுகளாக கட்சியில் இருக்க நான் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை”
இவ்வாறு எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.