Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை” - அமைச்சர் அன்பில் மகேஸ்

12:14 PM Jan 09, 2024 IST | Web Editor
Advertisement

10 ,11 ,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றம் இல்லை என்று
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பள்ளி கல்வித்துறையின் கல்வித் திட்ட இலச்சினை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக்கான நலம் நாடி செயலியை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.  கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாதாந்திர ஊக்கத் தொகை நேரடி பயனாளர் பணப் பரிவர்த்தனையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

“பொதுத்தேர்வு அட்டவணைகள் குறித்த அனைத்து விவரங்களும் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.  பொதுத் தேர்வு தேதிகளைத் தவிர்த்து தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தேதிகளை அறிவிக்கும் என நம்புகிறேன்.  ஏற்கனவே வெளியிடப்பட்ட 10, 11, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை” என அவர் தெரிவித்தார்.

Tags :
Anbil Mahesh PoyyamozhiEducationExam ScheduleExaminationNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article