"சம்பவம் இருக்கு"... 'குட் பேட் அக்லி' ஓடிடி ரிலீஸ் எப்போது? - வெளியான அப்டேட்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித்குமார். இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் குமார் – த்ரிஷா மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’.
இதையும் படியுங்கள் : “இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே”… போப்பாக மாறிய டிரம்ப் – வைரலாகும் புகைப்படம்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்திரி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்.10ம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.
அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் மே 8ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.