Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தங்கம் விலை உயர்வு - இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
12:14 PM Sep 16, 2025 IST | Web Editor
தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

Advertisement

வார தொடக்க நாளான நேற்று தங்க விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.81,680-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் , இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று  ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,280க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.82,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.144க்கும், ஒரு கிலோ ரூ.1,44,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
ChennaiGoldpriceGoldRateJewellerysilvertodaygoldrate
Advertisement
Next Article