Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#THEGOAT ட்ரெய்லர் : 1 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து வைரல்!

07:15 PM Aug 17, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜய் நடித்துள்ள GOAT திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 1 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

Advertisement

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கி இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர். மேலும் இது விஜய் அரசியலுக்கு வந்தபிறகு வெளியாகும் முதல் படமாகும்.

இதையும் படியுங்கள் : பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி முறைகேடு தொடர்பான வழக்கு – உயர்நீதிமன்றத்தில் #TNGovt விளக்கம்

ஏற்கனவே இப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் டிரைய்லருக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு இருந்தனர்.  தொடர்ந்து, தி கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (ஆக. 17) வந்துவிடும் என இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். அந்த வகையில் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ட்ரெயிலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் 'தி கோட்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 1 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும், ட்ரெய்லரை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்னதாக லியோ திரைப்படம் ஒரு நாளில் 31 மில்லியன் பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :
#ThalapathyVijayAGSTHEGOATTheGreatestOfAllTimeTrailerVenkatPrabhuvijay
Advertisement
Next Article