Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"#TheGoat " படத்தின் ட்ரெய்லர் ஆக.17ம் தேதி வெளியாகிறது - படக்குழு அறிவிப்பு!

05:21 PM Aug 15, 2024 IST | Web Editor
Advertisement

கோட் படத்தின் ட்ரைலர் வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் எனபடக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். செப்.5 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், இதன் இறுதிக்கட்ட விஎஃப்எக்ஸ் மற்றும் எடிட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.முன்னதாக, கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

கோட் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில்,கோட் படத்தின் ட்ரைலர் வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் எனபடக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

 

 

Tags :
actor vijayGreatest of All TimeThe Goatvenkat prabhu
Advertisement
Next Article