Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வடபாவ் கேர்ள் சந்திரிகாவின் முகத்தை டாட்டூ குத்திய இளைஞர்... வைரலாகும் வீடியோ!

02:48 PM Jul 02, 2024 IST | Web Editor
Advertisement

பிரபல இன்ஸ்டாகிராமர் சந்திரிகா கெராவின் முகத்தை டாட்டூ குத்திய இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

வடமாநிலங்களின் முக்கிய உணவுகளில் ஒன்று ‘வடபாவ்’. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை எங்கு சென்றாலும் வடைபாவ் கிடைக்கும். டெல்லியின் சைனிக் விஹாரில் உள்ள ஒரு ஸ்டாலில் வட பாவ் விற்று பிரபலமடைந்தவர் இன்ஸ்டாகிராமர் சந்த்ரிகா கெரா தீட்சித். அதிலிருந்து இவர் வடபாவ் கேர்ள் எனவும் அழைக்கப்படுகிறார். தற்போது இவர் ஹிந்தியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் OTT 3 நிகழ்ச்சியின்  பங்கேற்பாளராக உள்ளார். ஜியோ சினிமாவில் ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியினை நடிகர் அணில் கபூர் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் சந்த்ரிகாவின் முகத்தை இளைஞர் ஒருவர் டாட்டு குத்திய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. மகேஷ் சவான் என்னும் டேட்டு குத்தும் நபர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தான் வேலையில்லாத போது சந்த்ரிகாவால் ஈர்க்கப்பட்டதாகவும், அவள்தான் குரு எனவும் அந்த இளைஞன் தெரிவித்துள்ளான். இந்த வீடியோ தற்போது வரை 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் பல கருத்துகளை குவித்து வருகிறது.

இதற்குதான் கல்வி என்பது முக்கியம். அறிவுக்கட்டத்தனம். இதற்காக விரைவில் வருத்தப்படுவாய் என அனைவரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Tags :
Anil KapoorBigg Boss OTT 3Chandrika Gera DixittattooVada Pav Girl
Advertisement
Next Article