இது புதுசா இருக்குண்ணே! - ஒரே செடியில் உருளைக்கிழங்கு, தக்காளியை விளைவித்த இளைஞர்
ஆலன் ஜோசப் என்ற இளைஞர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியை ஒரே செடியில் விளைவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
விவசாயத்துறையில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. விவசாயத்தின் வளர்ச்சிக்காக நாட்டின் வேளாண் விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை வழங்கி வருகின்றனர். கிராப்டிங் என்பது அத்தகைய நவீன தொழில்நுட்பங்களுள் ஒன்று. இது மரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தற்போது, இது தாவரங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.
இதையும் படியுங்கள் ; ‘டெல்லி சலோ’ போராட்டம் - 6 மாதத்திற்கு தேவையான உணவு, எரிபொருட்களுடன் தயாரான விவசாயிகள்!
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்திய உணவு முறைகளில் மிகவும் அத்தியாவசியப் பொருளாக பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்கையும் தக்காளியையும் ஒரே செடியில் வளர்த்து இளைஞர் ஒருவர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த ஆலன் ஜோசப் என்ற இளைஞர் தான் அவர்.
இது குறித்து பேசிய ஆலன் ஜோசப், "தக்காளி, உருளைக்கிழங்கு என இரண்டு செடிகளில் ஒட்டுதல் செய்யப்படுகிறது. இந்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு செடியின் மூலம் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். சுமார் 1.5 கிலோ உருளைக்கிழங்கு மற்றும் இரண்டு கிலோ தக்காளி கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார். இவரது வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நாட்டில் முதன்முறையாக இந்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி இரண்டையும் ஒரே செடியில் வளர்த்தது குறிப்பிடத்தக்கது.