Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சீனப் பெருஞ்சுவர் மீது உலகின் மிக நீளமான ஓவியம் - கின்னஸ் சாதனை படைத்த பெண் ஓவியர்!

12:59 PM Jan 13, 2024 IST | Web Editor
Advertisement

குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர்,  சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார்.

Advertisement

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர், உலகின் ஏழு அதிசயங்களுள் முதன்மையானது.  இடைவெளி இல்லாமல் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நீளம் கொண்ட சீன பெருஞ்வர், சான்காய்குவானில் இருந்து ஜியாயூகுவான் வரை இருக்கிறது.

எந்திரங்கள் பயன்பாடு அறவே இல்லாத அந்த காலக்கட்டத்தில் முற்றிலும் மனிதர்கள் உழைப்பை பயன்படுத்தி கட்டப்பட்டது.  இந்த சுவரின் கட்டுமானப்பணிகள் கி.மு. 3-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டன.  இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர்,  சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: காற்று மாசுபாட்டில் எந்த நகரம் முதலிடம் தெரியுமா?

அவரது குறிப்பிடத்தக்க சாதனை கின்னஸ் உலக சாதனைகளில் (GWR) ஒரு விரும்பத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.  குவோ ஃபெங், சீனப் பெருஞ்சுவரின் மேல் அமர்ந்து 60 நாட்களுக்கும் மேலாக பிரமிக்க வைக்கும் தனது கலைப் படைப்பை 1,014-மீட்டர் நீளமுள்ள கேன்வாஸில் வரைந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

குவோ ஃபெங்கின் இணையற்ற இந்த சாதனையை கின்னஸ் அங்கீகரித்துள்ளது.

 

இந்த அசாத்திய சாதனையை அவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு வசீகரிக்கும் வீடியோவாக பகிர்ந்துள்ளனர்.

Tags :
chinaGreat WallGWRHua Guofengnews7 tamilNews7 Tamil Updatesworld
Advertisement
Next Article