Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”இந்தியாவுடன் சேர்ந்து செமிகண்டக்டர் எதிர்காலத்தை உருவாக்க உலகம் தயாராக உள்ளது” - பிரதமர் மோடி உரை!

செமிகான் இந்தியா 2025 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுடன் சேர்ந்து செமிகண்டக்டர் எதிர்காலத்தை உருவாக்க உலகம் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
05:55 PM Sep 02, 2025 IST | Web Editor
செமிகான் இந்தியா 2025 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுடன் சேர்ந்து செமிகண்டக்டர் எதிர்காலத்தை உருவாக்க உலகம் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
Advertisement

இந்திய பிரதமர் மோடி, டெல்லியின் யஷோபூமியில் செமிகான் இந்தியா 2025ஐ தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர்,

Advertisement

”ஜப்பான் பயணத்தின் போது, ​​ஜப்பானின் பிரதமர் ஷிகெரு இஷிபா-சானுடன் டோக்கியோ எலக்ட்ரான் தொழிற்சாலையைப் பார்வையிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தொழில்நுட்பத்துடனான எனது ஆழமான தொடர்பு மற்றும் பற்று என்னை மீண்டும் மீண்டும் உங்களிடையே கொண்டு வருகிறது. இன்று, உலகம் முழுவதிலுமிருந்து செமிகண்டக்டர் தொடர்பான நிபுணர்கள் இங்கே உள்ளனர், 40-50 நாடுகள் இங்கே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் புதுமை மற்றும் இளைஞர் சக்தியும் இங்கே தெரியும், இது "உலகம் இந்தியாவை நம்புகிறது" என்ற ஒரே ஒரு செய்தியை மட்டுமே கொண்டுள்ளது. இந்தியாவுடன் சேர்ந்து செமிகண்டக்டர் எதிர்காலத்தை உருவாக்க உலகம் தயாராக உள்ளது.

இந்தியா இன்று வளர்ந்து வரும் வேகம் நம் அனைவரிடமும், தொழில்துறையிலும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனிடமும் புதிய ஆற்றலைப் புகுத்துகிறது. இதுதான் வளர்ச்சியின் திசை என்றால், இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி வேகமாக நகரும் என்பது உறுதி. இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளி விவரங்கள் என்பது, இந்தியா ஒவ்வொரு எதிர்பார்ப்பு மற்றும் மதிப்பீட்டையும் தாண்டி செயல்பட்டதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.

உலகின் பல பொருளாதாரங்கள் நிச்சயமற்ற தன்மை தொடர்பான சவால்களை எதிர்கொள்கின்றன.ஆனாலும் அந்த சூழலுக்கு மத்தியில், இந்தியா 7.8 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சி அனைத்து துறைகளிலும் தெரியும், மேலும் இது நமது குடிமக்களுக்கு ஒரு தனித்துவமான உற்சாகத்தைத் தருகிறது. இது இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் நாம் நன்றாக இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டுகிறது. கடந்த நூற்றாண்டு எண்ணெய்யால் வடிவமைக்கப்பட்டது, உலகின் தலைவிதி எண்ணெய் கிணறுகளால் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் 21ம் நூற்றாண்டின் சக்தி ஒரு சிறிய CHIPகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த chip சிறியதாக இருக்கலாம், ஆனால் உலகின் முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய சக்தியைக் கொண்டுள்ளது. எண்ணெய் "கருப்பு தங்கம்" என்று கூறப்படுகிறது, ஆனால் chip- கள் டிஜிட்டல் "வைரங்கள்".கடந்த நூற்றாண்டை எண்ணெய் வடிவமைத்தது, ஆனால் 21ம் நூற்றாண்டில், சக்தி இந்த சிறிய Chip.க்குள் உள்ளது. அவை உலகளாவிய முன்னேற்றத்தை வேகப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

உலகளாவிய செமிகண்டக்டர் சந்தை வரும் ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர்களைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செமிகண்டக்டர் துறையில் இந்தியா முன்னேறி வரும் வேகத்துடன், இந்த டிரில்லியன் டாலர் சந்தையில் நமது நாடு குறிப்பிடத்தக்க பங்கைப் பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

2021ம் ஆண்டில்,செமிகான் திட்டத்தைத் இந்தியா தொடங்கியது. 2023ம் ஆண்டில், இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஆலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2024ம் ஆண்டில், மேலும் சில ஆலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2025ம் ஆண்டில், மேலும் 5 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மொத்தத்தில், 10 செமிகண்டக்டர் திட்டங்களில் 1.5 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் செய்யப்படுகின்றன. இது  இந்தியாவின் மீதான உலகின் நம்பிக்கையை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

செமிகண்டக்டர் தொடர்பான இந்த பயணம் தாமதமாகத் தொடங்கியது, ஆனால் இப்போது எதுவும் நம்மைத் தடுக்க முடியாது. சீர்த்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தைப் இந்தியா பின்பற்றி வருகிறது. வரும் காலங்களில், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களின் புதிய கட்டத்தைத் தொடங்க உள்ளோம். உலகம் முழுவதும்,இது இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது , தயாரிக்கப்பட்டது என உலகத்தால் கூறப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை”

என்று பேசி முடித்தார்.

Tags :
IndiaNewslatestNewsPMModiSemiconductorsemiconindia2025
Advertisement
Next Article