தென்காசியில் முதன் முறையாக கழுகுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
தென்காசி மாவட்டத்தில் முதன் முறையாக கழுகுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளானது புலி, சிறுத்தை, மான், காட்டுமாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வன உயிரினங்களின் வாழிடமாக உள்ளது. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் உள்ள உயிரினங்களில் எண்ணிக்கை குறித்தும், அதன் வாழிட மேலாண்மை குறித்தும் வனத்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை.!
இதற்கு முன்னதாக வனத்துறையினர் மூலம் யானைகள், புலிகள் உள்ளிட்ட கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் முதல் முறையாக கழுகுகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
குறிப்பாக, கழுகு இனங்கள் தற்போது படிப்படியாக அழிந்து வருகிறது. இந்த நிலையில், கழுகு இனத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்தவும், அதற்கு ஏற்றார் போல் வாழிட சூழ்நிலைகளை உருவாக்கும் வகையிலும் கழுகுகள் கணக்கெடுப்பு பணியானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.