Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜய் மக்கள் இயக்கத்தை புதிய கட்சியாக பதிவு செய்யும் பணிகள் தீவிரம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்னென்ன?

10:28 PM Feb 01, 2024 IST | Web Editor
Advertisement

விஜய் மக்கள் இயக்கத்தை புதிய கட்சியாக பதிவு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

விஜய் மக்கள் இயக்கம் புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்ப்பதற்காக இருந்த (விமஇ) என்கிற app தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக கட்சி தொடங்கப்பட்ட பிறகு புதிதான ஒரு app நிறுவப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்பட உள்ளது. விஜய் மக்கள் இயக்கம் புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகம் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை புதிய கட்சியாக பதிவு செய்ய புஸ்ஸி ஆனந்த் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் வருகிற 4-ம் தேதி டெல்லி செல்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் Goat திரைப்படத்தை விட  புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Goat - திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பிறகு திரைப்படம் வெளிவருதற்கு முன்பாக புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் சார்பாக மதுரை அல்லது திருச்சியில் மாநாடு நடைபெற உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
தலைவர் விஜய்Bussy Anandnews7 tamilNews7 Tamil Updatessocial workThalapathythalapathy vijay makkal iyakkamvijayVijay Makkal iyakkam
Advertisement
Next Article