Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

க்னானயா மக்கள் புத்திசாலிகள் என ட்ரம்ப் பேசியதாக பரவும் வீடியோ ஒரு #DeepFake - ஏன் ?

08:27 AM Nov 16, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘Factly’

Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் தொடர்பாக பல்வேறு பொய் செய்திகளும், புரளிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.  இந்த நிலையில் ட்ரம்பின் பேச்சு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் "எனக்குத் தெரிந்து அறிவில் மிகக் கூர்மையான மக்கள் சிகாகோவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களையும் வைத்திருக்கும் க்னானயா மக்கள்தான்" என்று தெரிவித்துள்ளார். இந்த   வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி  வருகிறது.

கி.பி 345 இல் மெசபடோமியாவிலிருந்து  குடிபெயர்ந்த க்னானயா சமூகம் இந்தியாவில் வாழும் ஒரு கிறிஸ்தவ இனக்குழு ஆகும். இந்தக் காணொளியின் உண்மைத்தன்மைய அறிய பேக்ட்லி உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது.

உண்மை சரிபார்ப்பு :

ட்ரம்ப் பேசியதாக வைரலான வீடியோவின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி இணையத்தில் தேடினோம். இதன் முடிவில் அப்படி எந்த செய்தியும் பிரதான ஊடகங்கள் மற்றும் செய்திகளில் இடம்பெறவில்லை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, டொனால்ட் ட்ரம்பின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' தளத்தில் அவர் இதைப் பற்றி ஏதாவது ட்வீட் செய்திருக்கிறாரா என தேடியபோது அப்படி ஒரு தகவலை எங்கேயும் காணமுடியவில்லை.

இதனைத் தொடர்ந்து வைரலான வீடியோவைப் பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறிய, அதன் சில கீஃப்ரேம்களை எடுத்து அதனை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தினோம். இந்தத் தேடலின் முடிவில் வைரலான வீடியோ தொடர்பான   அசல் வீடியோவுக்கு  அழைத்துச் சென்றது. இது டொனால்ட் ட்ரம்ப் 2017 மே மாதம் அமெரிக்க அதிபராக இருந்தபோது NBC செய்திக்கு அளித்த  பேட்டியாகும் .  அந்த வீடியோவில் சரியாக 12:30 நேரத்தில் உள்ள காட்சிகள்  வைரஸ் கிளிப்பில் பரவிய காட்சிகளுடன் பொருந்துகின்றன. அந்த குறிப்பிட்ட இடத்தில் அவர் க்னானயா மக்களைப் பற்றி பேசவில்லை. அது மட்டுமல்ல, இந்த நேர்காணலில் உள்ள முழு பேட்டியிலும் அவர் எங்கும் அதுபற்றி பேசவில்லை.

இந்த வீடியோ டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரித்து உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோவைக் கண்டறியும் True Media கருவி மூலம் இந்த வீடியோவை ஆய்வுக்கு உட்படுத்தினோம். இதன் மூல வைரல் கிளிப்புகளில் வெளியானது ஒரு டீப்ஃபேக் வீடியோ என்பது ட்ரூ மீடியா ட்ரூ மீடியா அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

முடிவு :

க்னானயா மக்களைப் பற்றி ட்ரம்ப் பேசியதாக பரப்பப்படும் வீடியோ போலியானது என்றும் திரித்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
deepfakeFalseknanayaPeoplesmartestTrumpVideo
Advertisement
Next Article