Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பக்தர்கள் அரோகரா என முழங்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற வேல் வாங்கும் விழா!

09:04 PM Nov 06, 2024 IST | Web Editor
Advertisement

சூரசம்ஹாரம் நாளை (07.11.2024) நடைபெறுவதையொட்டி பக்தர்களின் அரோகரா முழக்க விண்ணை பிளக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயிலில் கோவர்த்தனாம்பிகையிடம் வேல் வாங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

Advertisement

அறுபடைவீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் காலையிலும், மாலையிலும் சண்முகர் சன்னதியில் சண்முகார்ச்சனை நடைபெற்று வந்தது. உற்சவர் சுப்பிர மணியசாமி-தெய்வானை அம்மன் நாள்தோறும் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தினை 6 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர்.

விழாவின் உச்ச நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு சூரனை
வதம் செய்வதற்காக தாய் கோவர்த்தனாம்பிக்கையிடமிருந்து வேல் வாங்கும் விழா
விமர்சையாக நடைபெற்றது. கோவில் கம்பத்தடி மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரர்
கோவர்த்தனாம்பிகை சுப்ரமணிய சுவாமி மலர் மாலைகளாலும் தங்க வைர நகைகளாலும்
அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருளினர்.

தொடர்ந்து மூலவர் சன்னதியில் இருந்து கோயில் ஸ்தானிகபட்டர் வைர கற்கள் பதிக்கப்பட்ட வேலை பக்தர்களின் அரோக கோஷம் முழங்க சகல பரிவாரங்களோடு கையில் ஏந்தி வந்தார். பின்னர் பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை பிளக்க தாய் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து சுப்பிரமணிய சுவாமி
வேல் வாங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவின் உச்ச நிகிழ்ச்சியான சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு சன்னதி தெருவில் நடைபெறும்.

Tags :
KandaSastiKANTHA SASHTI VEL FESTIVALnews7 tamilsoorasamharamthiruparankundram
Advertisement
Next Article