Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

லட்சக்கணக்கில் எகிறிய ராகுல் காந்தி தைத்த காலணிகளின் மதிப்பு | கோடி ரூபாய் கொடுத்தாலும் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என கூறும் தொழிலாளி!

01:41 PM Aug 01, 2024 IST | Web Editor
Advertisement

ராகுல் காந்தி தைத்த காலணிளை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பலர் கேட்ட நிலையிலும், கோடி ரூபாய் கொடுத்தாலும் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என செருப்பு தைக்கும் தொழிலாளி தெரிவ்சித்துள்ளார்.  

Advertisement

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி. இவர் கடந்த 26 ஆம் தேதி சுல்தான்பூருக்கு சென்றிருந்தார். அப்போது சாலையோரத்தில் ராம்சைத் என்ற ஒரு தொழிலாளி காலணி தைக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் ஏழ்மை நிலையை பார்த்த ராகுல் காந்தி அவரிடம் சென்று பேசினார்.

அப்போது அந்த தொழிலாளி தான் 40 ஆண்டுகளாக காலணி தைத்து வருவதாக கூறினார். மேலும் அவர் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும் வேதனைகளையும் ராகுல் காந்தியிடம் கூறினார். இதனைக் கேட்ட ராகுல் காந்தி அந்த தொழிலாளிக்கு உதவ எண்ணினார்.

அதன்படி அவருக்கு புதிதாக தையல் மெஷின் ஒன்றை பரிசாக வழங்கினார். இதனை கண்ட அந்த தொழிலாளியின் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. இதைத் தொடர்ந்து அவர் மகிழ்ச்சியில் “இனி கைகளில் காலணிகளை தைக்க தேவை இல்லை” என்று கூறினார். மேலும்  அவரிடம்  உரையாடிய ராகுல் காந்தி, காலணி தைக்கவும் கற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தைத்த காலணியை வாங்குவதற்கு பலரும் ராம்சைத்தை அழைத்து வருகின்றனராம். அந்த காலணிகளை வாங்குவதற்கு பலர் அதிக விலை கொடுத்து வாங்க தயாராக உள்ளனர். ஆனால் அதை விற்க ராம்சைத்   மறுத்துவிட்டார்.

ஊடக நிருபரிடம் பேசிய ராம்செட்,  நான் உயிருடன் இருக்கும் வரை அவற்றை கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த காலணியை யாருக்கும் கொடுக்க மாட்டேன். தனக்கும் பல தொலைபேசி அழைப்புகள் வருவதாக ராம்செட் கூறினார். ராகுல் காந்தி தைத்த காலணிகள் எனக்கு விலைமதிப்பற்றவை. ராகுல் காந்தியால் தைக்கப்பட்ட காலணிகளை நாங்கள் பிரேம் செய்து கடையில் வைப்போம். என அவர் தெரிவித்தார்.

Tags :
Leader of OppositionRahul gandhiviral video
Advertisement
Next Article