Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்று மாலை வெளியாகிறது ‘விடாமுயற்சி‘ படத்தின் அப்டேட்!

02:23 PM Aug 11, 2024 IST | Web Editor
Advertisement

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி‘ படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகிறது.

Advertisement

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வரும் படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.  இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கியது.

இதனிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் இணைந்தார்.  இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த சூழலில் கடந்த மாதம் அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியது.  இதில் கிளைமாக்ஸ் உட்பட முக்கிய காட்சிகள் படம் ஆக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 30 நாட்களுக்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்தாக ஜூலை 22ம் தேதி படக்குழு அறிவித்தது.  இது தொடர்பாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தது.  அதில் நடிகர் அஜித் உட்பட படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.

இப்படத்தில் நடித்துள்ள அர்ஜுன் மற்றும் நடிகர் ஆரவ்-ன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.  இந்த நிலையில், விடாமுயற்சி‘ படத்தில் அப்டேட் இன்று இரவு 7.21 மணிக்கு வெளியாகும் என நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Tags :
AjithkumarMagizh Thirumenimovie updatethala ajithVIDAMUYARCHIVidamuyarchi Updates
Advertisement
Next Article