Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாற்று ஏற்பாடு செய்து தராமல் பயணச்சீட்டை ரத்து செய்த டிராவல்ஸ் - பயணிக்கு ரூ.30,250 வழங்க நீதிமன்றம் உத்தரவு!

11:17 AM Jun 07, 2024 IST | Web Editor
Advertisement

டிராவல்ஸ் நிர்வாகம் பயணச்சீட்டை எந்த அறிவிப்பும் இன்றி ரத்து செய்ததாலும், மாற்று ஏற்பாடு எதுவும் செய்து தராததாலும், பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.30,250 டிராவல்ஸ் நிர்வாகம் வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் மீனா, ரவிக்குமார், நிவேதா.  இவர்கள் வெங்கடேஸ்வரா டிராவல்ஸ் என்ற நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி சென்னையில் இருந்து சிவகாசிக்கு பயணம் செய்ய பயணச்சீட்டை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர். இதற்காக அவர்கள் ரூ.2250 செலுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதியன்று அவர்கள் பயணம் செய்ய காத்திருந்த நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக டிராவல்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாற்று வழியில் பயணம் செய்ய எந்த ஏற்பாடும் நிறுவனம் சார்பில் செய்துதரவில்லை.

எனவே, முன்பதிவு செய்த பணத்தை திருப்பி தரவில்லை எனவும், மாற்று ஏற்பாடும் எதுவும் செய்து தரவில்லை எனவும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை நீதிபதி சக்கரவர்த்தி விசாரித்தார். பின்னர் வெங்கடேஸ்வரா டிராவல்ஸ் நிர்வாகம் 2250 ரூபாயை திரும்பச் செலுத்தவும்,  மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 20 ஆயிரம் ரூபாயும், வழக்குச் செலவுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

Tags :
consumer courtNews7Tamilnews7TamilUpdatessivakasiSrivilliputhurVenkateswara Travels
Advertisement
Next Article