’பைசன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துரூவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
08:27 PM Oct 13, 2025 IST
|
Web Editor
Advertisement
கோலிவுட்டின் முன்னணி நடிகரான சீயான் விக்ரமின் மகன் நடிகர் துருவ் விக்ரம் ஆவார். ஆதித்யா வர்மா, மகான் உள்ளிட்ட படங்களில் நடித்த துரூவ் விக்ரம், தற்போது இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
Advertisement
மேலும், இப்படத்தில் லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இயக்குநர் பா. ரஞ்ஜித்தின் நீலம் புரெடக்ஷன் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்.17ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன் படி தற்போது பைசன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
Next Article